Thursday, December 29, 2016

பழைய சாத அடை

பழைய சாத அடை

   மிகு‌தியான சாத‌த்தை எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று குழ‌ம்புபவ‌ர்களா ‌நீ‌ங்க‌ள். கவலையை விடுங்கள்.மீந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று ஓடவிடவு‌ம்.

அத்துடன் சிறிது அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி பொடித்த மிளகு, நறுக்கின சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம், நறுக்கின பச்சை மிளகாய், சிறிது தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் க‌றிவே‌ப்‌பிலையை‌ப் போ‌ட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்.

இதனை தோசை‌க் க‌ல்‌லி‌ல் அடையாக ஊற்றிக் கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
 More products